தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், வேலூர், திருபத்தூர் மற்றும் ராணிப்பேட் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


அதேபோல் நாளை மறுநாள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 6 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை,  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 8 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 


சென்னையில் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் நகரின் அனேக பகுதிகளில் விட்டு விடு மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவாக மழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம், கிண்டி, அலந்தூர், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், அடையாறு, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகலில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒரு சில சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) 8, அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்), மாஞ்சோலை (திருநெல்வேலி மாவட்டம்), ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்), காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்) தலா 7, களியல் (கன்னியாகுமரி மாவட்டம்), திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்), நாலுமூக்கு (திருநெல்வேலி மாவட்டம்) தலா 6, தென்காசி, கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) தலா 5, கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்), சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்), பரமக்குடி (இராமநாதபுரம் மாவட்டம்), பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்), சிதம்பரம் (கடலூர் மாவட்டம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்), தங்க ராமநாதபுரம் தலா 4, ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை மாவட்டம்), தொண்டி (இராமநாதபுரம் மாவட்டம்), மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்), கடலூர், சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை மாவட்டம்), மதுரை நகரம், மதுரை வடக்கு , மண்டலம் 02 மணலி (சென்னை மாவட்டம்), நுங்கம்பாக்கம் (சென்னை மாவட்டம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்), சீர்காளி (மயிலாடுதுறை மாவட்டம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்), ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்), எடப்பாடி (சேலம் மாவட்டம்), பல்லடம் (திருப்பூர் மாவட்டம்), ராமநாதபுரம், மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை மாவட்டம்), மண்டலம் 12 ஆலந்தூர் ( மாவட்டம் சென்னை), பாம்பன் (இராமநாதபுரம் மாவட்டம்), கண்ணதாசன் அணைக்கட்டு (திருநெல்வேலி மாவட்டம்), மண்டலம் 03 புழல் (சென்னை மாவட்டம்), மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்), திருவாரூர், லால்பேட்டை (கடலூர் மாவட்டம்), தலைஞர் (நாகப்பட்டினம் மாவட்டம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.