நேற்று (24-10-2023) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய   மிக தீவிர புயல் ஹாமூன் நேற்று மாலை 1730 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று (25-10-2023) காலை  0130-0230 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங் (Chittagong) க்கு அருகில் கடந்தது. 


வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 29 ஆம் தேதி 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


25.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


26.10.2023 முதல்  28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


30.10.2023 மற்றும் 31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


போடிநாயக்கனூர் (தேனி) 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 3, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மானாமதுரை (சிவகங்கை), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), தொண்டி (ராமநாதபுரம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கூடலூர் (தேனி), தேக்கடி (தேனி), பெரியாறு (தேனி), சிவகிரி (தென்காசி), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), வீரபாண்டி (தேனி), பெலாந்துறை (கடலூர்), அரண்மனைப்புதூர் (தேனி), கருப்பாநதி அணை (தென்காசி), மணியாச்சி (தூத்துக்குடி) தலா 2, திருவாடானை (ராமநாதபுரம்), உத்தமபாளையம் (தேனி), குப்பணம்பட்டி (மதுரை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), ஆயின்குடி (புதுக்கோட்டை), கடல்குடி (தூத்துக்குடி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. 


வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான ஹமூன் மறும் தேஜ் புயல்கள் கரையை கடந்த நிலையில், மீனப்வர்களுக்கு எந்த எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 


குலசையில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்


Safest metro city: நாட்டிற்கே முன்னோடி - பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரம் சென்னை - ஆய்வில் தகவல்


சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! திருப்பி விடப்படும் தனியார் பேருந்துகள்..! பயணிகள் அவதி