தொடர் விடுமுறை


தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை  மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் விழா என்பதாலும்,  தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதாலும் பெரும்பாலானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி  விழாவின் 9 நாளான ஆயுத பூஜை நேற்றுமுன் தினம் மிக விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.




அதேபோன்று நேற்று விஜயதசமி விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான விடுமுறை கடந்த சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக தமிழ்நாடு முழுவதும் இருந்தது.  இதனால் பணி நிமித்தமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த வெளியூரை சேர்ந்த பொதுமக்கள்  தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க துவங்கினர்.


போக்குவரத்து நெரிசல்


சென்னையிலிருந்து சொந்த ஊரை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியதால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் போக்குவரத்து நெரிசலால் சென்னை மற்றும் சென்னை புறநகர் சிக்கி தவித்தது. தமிழ்நாடு முழுவதும்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.




இதேபோன்று வடமாநிலத்தவரும் சென்னையிலிருந்து வட மாநிலத்திற்கு படையெடுத்து இருந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக சென்னை வழிச்சோடி காணப்பட்டது. இன்றைய தினம் சென்னையில் உள்ள பல சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் கூட்டத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


போக்குவரத்து நெரிசல்


இந்தநிலையில் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் துவங்க உள்ளன.  இதனால் வெளியூர் சென்று இருந்த, பொதுமக்கள்  சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகரித்துள்ளது. தென் மாவட்டத்தை இணைக்கக்கூடிய சாலையாக இருக்கக்கூடிய திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கரித்துள்ளது.




போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை புறநகர்


தொடர் விடுமுறை எதிரொலியாக கடந்த 4 நாட்களாக வெளியூர் சென்று இருந்த பொதுமக்கள் நேற்று மாலை முதல் சென்னை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதி கடும் போக்குவரத்தினர் சிலை சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் ,மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது.

 


வண்டலூரில் திருப்பி விடப்படும் தனியார் பேருந்துகள்


 



இந்தநிலையில், அதிகாலை முதலே சென்னையை நோக்கி பாடியிருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. அதிகாலையில் வரும் ஆம்னி பேருந்துகள் பெருங்களத்தூர் தாம்பரம் வழியாக, கோயம்பேடு செல்வது வழக்கம். அவ்வாறு பேருந்து செல்லும் பொழுது சென்னைக்கு உள்பகுதிகளுக்கு செல்பவர்கள் கிண்டி உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் இறங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே தாம்பரம் உள்ளிட்ட பகுதி போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருவதால், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தனியார் பேருந்துகள், வண்டலூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு வண்டலூர் - மீஞ்சூர் சாலை வழியாக கோயம்பேடுக்கு பேருந்துகளை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.



 

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். வண்டலூர் பகுதியில் இறங்கி சென்னை உள்பகுதிக்கு செல்பவர்களுக்கு முறையான போக்குவரத்து, வசியதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என பயணிகள் குமுறுகின்றனர். இந்த சந்திரப்தை பயன்படுத்தி வண்டலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் அதிக விலை கேட்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.