தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிபேட், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


01.11.2023 மற்றும் 02.11.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


03.11.2023 மற்றும் 04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. நேற்று காலை அதிகப்படியான வெயில் இருந்த நிலையில் இரவு பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. நேற்று இரவு மடிப்பாக்கம், ஆலந்தூர், மேடவாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அடையாறு, ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இன்று காலை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை பெய்த மழை அளவு எடுத்துக்கொண்டால் இயல்பை விட 39% குறைவாக தான் வடகிழக்கு பருவ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: (மில்லிமீட்டரில்)


நாகப்பட்டினம் 53.0, ஈரோடு 36.0, கரூர் பரமத்தி 27.0, நுங்கம்பாக்கம் (சென்னை) 23.0, காரைக்கால் 16.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 15.0, மதுரை 15.0, திருச்சிராப்பள்ளி 15.0, தர்மபுரி 12.0, சிதம்பரம் (கடலூர்) 26.5, விருதுநகர் 23.0, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 21.0, ராமநாதபுரம் 42.0, அருப்புக்கோட்டை (விருதுநகர்) 12.5, பூந்தமல்லி  (திருவள்ளூர்) 21.5, நந்தனம் (சென்னை) 20.0, வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 11.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 9.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 9.5 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.