நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமணலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,   


17.03.2023 முதல் 20.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும்.  


21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும்.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை   பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், ஆயிரம் விளக்கு, அடையாறு, தரமணி, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனிடையில் காலை வேளச்சேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. 


சில தினங்களுக்கு முன் வெப்ப அலை வீசி வந்த நிலையில் காலை முதல் பெய்த மழையால் பூமி குளிர்ந்துள்ளது. அனல் பறக்கும் சென்னை சில்லென்ற சென்னையாக மாறியுள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.