ஆவின் பால் எந்த தடையுமின்றி விற்பனை செய்யப்படும் என ஆவின் பால் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “ கிராமபுற பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது. ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை தவிர இதர சங்கங்களில்  வழக்கமான அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள்  பால் வழங்கினார்கள். ஆவின் மற்றும் பால் வளத்துறையின் கள அலுவலர்கள், சங்கங்களில் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பால் நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி  சில தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. எனவே ,ஆவின் பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடந்து நடைபெரும் . இதுகுறித்து  வரும் வதந்திகளையும், உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.