அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கைதான 32 பேரில் 12 பேர் பெயரை மாற்றிக்கூறியும், பொய்யான வீட்டு முகவரியைக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  காவல் துறையினரிடம் தந்தையின் தவறான பெயர்கள் மற்றும் அவர்களின் முகவரியைக் கொடுத்ததற்காக தேனாம்பேட்டை போலீசார் புதிய மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர்.


மேலும், முதலமைச்சர் இல்லத்தின் முன்பு ஏபிவிபி அமைப்பினர் திடீர் போராட்டத்தை நடத்த தூண்டியதற்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் துறைத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த டாக்டர் பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்ததாக ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


போராட்டம்..


அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி டெல்லியிலும் தமிழகத்திலும்  ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டின் முன்பும் சிலர் போராட்டம் செய்தனர். போராட்டத்தின்போது, மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.


இந்நிலையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரையும் பிப்ரவரி 28வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர்கள் முன் ஜாமின் கோரி வழக்கும் தொடர்ந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க கைதான 32 பேரில் 12 பேர் பெயரை மாற்றிக்கூறியும், பொய்யான வீட்டு முகவரியைக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


என்ன நடந்தது?


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வழக்கு வரக்கூடாது என்பதற்காக, தங்களது பெயரை மாற்றிக் கூறியிருக்கின்றனர். அடையாள அட்டையை வைத்து பெயரை பரிசோதிக்காமல் அவர்கள் கூறிய பெயரிலேயே காவல்துறையினரும் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையின் போது அவர்கள் பெயரைக்கூறியுள்ளனர். பெயர் மாற்ற சிக்கலால் கோபமடைந்த நீதிபதி போலீசாரிடம் கடுமை காட்டியதாக தெரிகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண