விழுப்புரம் : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் என்றும் வன்னிய மக்கள் ஓட்டு போடாமல் எந்த தலைவர்களும் தமிழகத்தில் பதவிக்கு வர இயலாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை, ரவிக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கோலியனூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்  வேல்முருகன் புதுச்சேரி தமிழகத்தில் 40 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த இந்த கூட்டணியை ஸ்டாலின் அமைத்து உள்ளதாகவும், சாதி மத வேறுபாடின்றி, சமூக மாற்றம் ஏற்பட விழுப்புரத்தில் பானை சின்னம் வெற்றி பெற வேண்டும் சாதிய சமூக ரீதியாக ஓட்டு அரசியல் பெற உள்ள கூட்டணியை அடித்து விரட்ட இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


விழுப்புரத்தில் கடந்த 5 வருடங்களாக ரவிக்குமார் எம்பியாக இருந்த போது மரங்கள் வெட்டப்படவில்லை இரு சமூகத்தினர் அடித்து கொள்ளவில்லை என்றும் தமிழ்நாட்டில் வன்னிய மக்களுக்கு பாதிப்பு என்றால் உடனடியாக தான்  திருமாவளவனுடன் பேசி சமரசம் ஏற்படுத்தி வருவதாகவும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த குடும்பத்தினருக்கு ராமதாஸ் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று தர முடியாததை நான் செய்துள்ளதாக தெரிவித்தார்.


சாதிவாரி, சமூகநீதி, என்று பேசக்கூடாது குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று கூறும் மருத்துவர் ராமதாஸ் பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு செயல்படுகிறார். இது தான் மாற்றம் முன்னேற்றமா என கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு என்பது சமூகநீதி மண் சமத்துவ மண் இங்கு தேர்தல் அறிவித்தபின் மோடி பத்து முறை வருகிறார். புயல் பேரிடர் வரும்போதெல்லாம் அவர் எட்டிபார்க்கவில்லை,விசிகவினர் கொடி பிடிச்சிட்டு கோஷம் போட்டுவிட்டு செல்ல கூடாது வருகின்ற 19-ஆம் தேதி பானை சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்.


ராமதாஸ் திருமாவளவன் கைகளை பிடித்து இணைந்த கைகளை எந்த கொம்பனாலும் பிரிக்க பிடியாது என்று கூறினால் ஆதரிக்கிறார்கள் அதே கையை பிடித்து நான் கூறினால் பாமகவினர் எதிர்க்கிறார்கள் என்றும் வன்னிய மக்கள் ஓட்டு போடாமல் எந்த தலைவர்களும் தமிழகத்தில் பதவிக்கு வர இயலாது என தெரிவித்தார். ஒரே இந்தியா தேர்தல் ஒரே மொழி என்று பாஜகவினர் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துவர்கள், இஸ்ஸாமியர்களின் ஒருங்கிணைந்த மனித குலத்தின் விரோத அரசாக பாஜக உள்ளது.


சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும்போதெல்லாம் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சியாக பாமக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் நிர்மலா சீதாராமணின் கணவர் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என அவரே தெரிவிப்பதாகவும் நவீன டிஜிட்டல் முறையில் பத்தாயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், நவீன முறையில் கொள்ளையடிக்கிற பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் ராணுவ ஆட்சியை கொண்டு வர துடிக்கிற சக்திகளுக்கும் சமூக நீதிக்காக போராடும் சக்திகளுக்குமான போர் நடைபெறுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.