தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.பாரதி.  ராஜ்யசபா எம்.பி.யான இவர் அவ்வப்போது கூறும் கருத்துக்களால் சர்ச்சையில் சிக்குகிறார். 


தற்போது நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்.பி. பதவியே கிடைத்தது. இவையெல்லாம் வேறு வழியில்லை. ஜீரணித்துக்கொள்ள தான் வேண்டும். கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்தி விட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நாங்கள் கொண்டுவந்த கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாம் எம்பி அமைச்சராகிவிட்டனர்." என திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலால் தி.மு.க. வட்டாரத்தி்ல் சலசலப்பு ஏற்பட்டது.


இதுதொடர்பாக, ஏ.பி.பி. சிறப்பு செய்தியாளர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:


"தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என நான் கூறவில்லை. இது திரித்துக் கூறப்பட்டுள்ளது. 
கட்சியின் வழக்கறிஞர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நான் பேசியபோது, சில பேருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் வருத்தம் இருக்கும். அது நியாயம் கூட. ஆனால், ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்தால், உங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறினேன்.


Kovai Selvaraj ADMK: "சுயநலத்துக்காக சண்டை போடும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்..." அ.தி.மு.க.வில் இருந்து விலகினார் கோவை செல்வராஜ்..!


பதவி வரும் போகும். ஆனால் நாம் கட்சியுடன் இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன். திமுகவில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறது என்று நான் கூறவில்லை" என்று கூறினார்.