தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் இன்று முதல் இனிப்பு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 


குலாப் ஜாமுன்


பழைய விலை:


125கி-ரூ.45


250கி-ரூ.80


புதிய விலை:


125கி-ரூ.50


250கி-ரூ.100


ரசகுல்லா:


பழைய விலை:


100கி-ரூ.40


200கி-ரூ.80


புதிய விலை:


125கி-ரூ.45


250கி-ரூ.90


கோவா:


பழைய விலை:


100கி-ரூ.45


250கி-ரூ.110


500கி-ரூ.210


புதிய விலை:


125கி-ரூ.50


250கி-ரூ.130


500கி-ரூ.250


மில்க் பேடா:


பழைய விலை:


100கி-ரூ.47


250கி-ரூ.110


புதிய விலை:


125கி-ரூ.55


250கி-ரூ.130


மேலும் மைசூர்ப்பா ஸ்வீட் கோவா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக ஆவின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வானது, இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.





 


ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தினார். பால் விற்பனையில் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஆவின் நிறுவனம், பால் மற்றும் 225 வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நாசர், விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வால், ஆவினில் இனிப்பு பொருடகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.






ஆவினில் இனிப்பு பொருட்களை பொத்தமாக ஆர்டர் செய்ய விரும்புவர்கள் 7358018390 என்ற வாட்சப் எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது 18004253300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.