கரூரில் நடந்து சென்ற இளைஞரை கத்தியால் கீறி தாக்கி 10,000 ரூபாய் பணம் பறித்த வழக்கில் அதிமுக நகர இளைஞர் பாசறை செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகிய இருவரும், அந்த இளைஞரை தாக்குதல் நடத்தி கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தி 10,000/- ரூபாய் பணத்தை பறித்த புகாரில், இருவரையும் கைது செய்த தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். இதில் மகேந்திரன் மத்திய மேற்கு நகர அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


கரூர் அருகே காணாமல் போன சித்தப்பாவை தேடும் மகன் - இருசக்கர வாகனத்தில் போஸ்டர் ஒட்டி சித்தப்பாவை தேடும் இளைஞரின் பாச போராட்டம்.


கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்குட்பட்ட செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 41). திருமணம் ஆகாத இவருக்கு இடது கால் வராத நிலையில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளார்.


இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் தற்போது வரை திரும்பி வரவில்லை. இந்த நிலையில் இவரது உறவினர்கள் காணாமல் போன பாலசுப்பிரமணியை கண்டுபிடித்து தரக்கோரி பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் உறவினர்கள் தரப்பிலும் அவரை தேடச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த நிலையில் காணாமல் போன பாலசுப்ரமணியை கண்டுபிடித்து தர கோரிக்கை விடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை இவரது அண்ணன் மகன் கொடுத்துள்ளார். மேலும், தனது சித்தப்பா காணாமல் போனது குறித்த அறிவிப்பு அடங்கிய போஸ்டர் ஒன்றை தனது இருசக்கர வாகனத்தில் ஒட்டி தேடத் துவங்கி உள்ளார். 




பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவது மட்டுமின்றி, இரு சக்கர வாகனத்தில் இவ்வாறு ஒட்டுவதால் பல நபர்கள் அவர் காணாமல் போனது குறித்து தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.