சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஓம் என்ற முழக்கத்துடன் காவி உடையில் பிரதமர் மோடி விவேகானந்தர் தியானித்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.
தற்போது தியானத்தில் அமர்ந்திருக்கும் மோடி, நாளை மதியம் வரை இதே நிலையில் தியானம் செய்ய இருக்கிறார்.
பலத்த பாதுகாப்பு:
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடியின் தியானம் தொடர்கிறது. நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானத்தை தொடங்கிய நிலையில், இது நாளை மாலை வரை தொடர்கிறது. விவேகானந்தர் எந்த பாறையில் தியானம் செய்தாரோ, அதே பாறையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார்.
45 மணிநேர தியானத்தின்போது, திரவ உணவை மட்டுமே சாப்பிடும் பிரதமர் மோடி, வெறும் தேங்காய் தண்ணீர் மற்றும் திராட்சை ஜூஸ் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறார். மேலும், இந்த தியான் நேரத்தில் பிரதமர் மோடி மவுன விரதம் இருப்பார் என்றும் தியான அறையை விட்டு வெளியே வரமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி 45 மணி நேரம் தங்குவதற்கு பலத்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் கொண்ட குழு நிறுத்தப்படும் மற்றும் பிரதமரின் நிகழ்ச்சியின் போது பல்வேறு பாதுகாப்பு எஜென்சிகள் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
2019ம் ஆண்டு கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி:
மக்களவை தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக ஏதாவது செய்து வருகிறார். 2014 தேர்தல் முடிவுகளுக்கு முன், பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி மகாராஜாவை வணங்கினார். அதேபோல், 2029 மக்களவை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் அமர்ந்து தியானம் செய்தார். இப்போது 2025 மக்களவை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள சுவானி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்கிறார்.