அரசு விரைவுப்பேருந்து- டிக்கெட் முன்பதிவு

போக்குவரத்து துறை சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம். பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நள்ளிரவு வரை பேருந்து நிலையங்களில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையானது ஏற்படும். இதற்காகவே போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்படும் நீண்ட தூர பேருந்துகளில் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் முன் பதிவு செய்து பயணிக்கும் படி பல முறை கோரிக்கை விடுக்கும். ஒவ்வொரு வாரமும் போக்குவரத்தது துறை சார்பாக வெளியிடப்படும் அறிவிப்பில், முன்பதிவு செய்து பயணியுங்கள் என அறிவிப்பும் வெளியிடப்படும்.

Continues below advertisement

SETC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

ஆனால் முன்பதிவு செய்யாமல் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வருவதால் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இயக்க முடியாத நிலையானது நீடித்து வருகிறது. இந்த நிலையில் SETC சார்பில் இயக்கப்படும் தொலைதூரப் பேருந்துகளில் இனி ஆன்லைன் டிக்கெட் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என முடிவெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதி மற்றும் விழா காலங்களில் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமத்தை தவிர்க்கக் கூடிய வகையில் தொலைதூரப் பேருந்துகள் முன்பதிவு பேருந்துகளாக இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது 

அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் (SETC) சார்பில் சுமார் 1200 க்கு  மேற்பட்ட தொலைதூர பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன , குளிரூட்டப்பட்ட , சாய்வு இருக்கை மற்றும் படுக்கை பேருந்துகள் தொலைதூரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த வகை பேருந்தில் பயணிக்க ஆன்லைன் முறையிலும் நேரடியாக நடத்துனரிடமும் இருக்கைகளின் இருப்பை பொருத்து டிக்கெட் பெரும் முறை இருந்தது.

Continues below advertisement

TNSTC பேருந்து முன்பதிவு இல்லாத பயணம்

இந்த நிலையில், வரும் நாட்களில் பேருந்து புறப்படும் இடத்திலேயே முழுமையாக டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக நிரப்பிடவும் , நேரடியாக டிக்கெட் பெறுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட பேருந்து நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு டிக்கெட்டுகளாக பெற்று பயணத்தை உறுதிப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் வட்டார தகவலாக உள்ளது. 

அதேபோல் நிகழ் நேர பயண தரவுகள் அடிப்படையில் மற்ற இடங்களில் உள்ள பயணிகளும் எளிதாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யக்கூடிய வகையில் முன்பதிவிற்கான இணையதளம் மற்றும் செயலி மேம்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது , அதேசமயம் மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கும்பகோணம் போன்ற தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழக (TNSTC)  இயக்கப்படும் புறநகர் பேருந்து சேவைகளில் முன்பதிவில்லாத பயணம் தொடரும் என்று துறை தெளிவுபடுத்தியது