திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட மேல் வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாமொழி. இவர் அதிமுகவில் ஒன்றியச் செயலாளராக பல வருடங்களாக உள்ளார் இவருடைய, மகள் நிலவழகி இவர் பட்டபடிப்பு முடித்துள்ளார். நிலவழகி கடந்த 2020-ஆம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிலவழகி போட்டியிட்டார். இளம் பொறியியல் பட்டதாரியான நிலவழகி, அந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவரும் ஆனார். இளம் வயதில் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த அவர், இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அதில் இருந்துள்ளார். தலைவர் பதவியில் பட்டதாரி பெண் என்பதாலும் அப்பகுதி மக்களுக்கு தேவையானதை அறிந்து அப்பகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றினார்.
பணியாற்றி கொண்டே அவருடைய லட்சயத்தை அடைவதற்கும் கிடைக்கும் நேரங்களில் படித்தும் வந்துள்ளார். இந்நிலையில் சென்னை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலர் பணி கிடைத்துள்ளது. வங்கித் தேர்வு மூலம் இந்தப் பணிக்கு தேர்வாகியுள்ள நிலவழகி பஞ்சாயத்து தலைவர் பதவியை முறைப்படி ராஜினாமா முடிவெடுத்துள்ளார். பின்னர் நிலவழகி தனது ராஜினாமா கடிதத்தை கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று முன்தினம் வழங்கியுள்ளார். தற்போது தலைவர் பதவிக்கான அதிகாரம் துணைதலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து நிலவழகியிடம் பேசுகையில்;
நான் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பு நான் மக்களுக்கு சேவைகள் செய்து கொண்டு இருந்தேன். பிறகு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் மக்களின் விறுப்பத்தை செய்ய ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றுதான் பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட்டேன், அதேபோல் மக்களும் எண்ணை தேர்வு செய்தனர். இதுவரை நான் மக்களின் பணியைச் சிறப்பாக பணியாற்றி வந்தேன். இந்நிலையில், நான் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனவே, எதிர்காலத்தைக் கருதி, நான் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். பதவியில் இருந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. பதவி இல்லாமலும்கூட நல்லது செய்யலாம். எண்ணுடைய அப்பாவுடன் சேர்ந்து மக்களுக்கு பணிசெய்யவும் உள்ளேன். எங்கள் கிராம மக்களும் நீ சேர்ந்து இருக்கும் வேலையில் நீ பல பொறுப்புகளில் முன்னேறி செல்லவேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பகுதிமக்களிடம் பேசுகையில்..
எங்களுடைய கிராமத்தில் தலைவர் நிலவழகி முதியோர் உதவிதொகை, அரசு வீடுகள், போன்ற அரசின் சலுகைகளை ஏழைமக்களை அறிந்து எங்களு வழங்கினார். தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராக பணியில் சேரும் நிலவழகி எதிர்காலத்தில் மேலாளர், மண்டல அலுவலர் என பல உயர்ந்த இடங்களுக்கு வருவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவருக்கு வாக்களித்து தேர்வு செய்த கிராமமக்கள்.