மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களில் கடுமையான சேதாரம் ஏற்பட்ட நிலையில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,


மருத்துவ உதவிகள்:



  • மக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். நடமாடும் மருத்துவ மற்றும் பொது சுகாதார பிரிவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றன இதன் மூலம் மக்கள் உதவி பெறலாம்.

  • புயலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, டெட்டனஸ் டோக்ஸாய்டு இன்ஜெக்ஷன் அனைத்து மருத்துவ முகாம் அல்லது மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

  • மருத்துவ பராமரிப்புக்கு கூடுதலாக, பிளீச்சிங் பவுடர் நடமாடும் மருத்துவ மற்றும் பொது சுகாதார பிரிவுகள் மூலம் மருத்துவ முகாம்களில் இருக்கும் சம்ப்கள் / மேல்நிலை தொட்டிகளும் வழங்கப்படுகின்றன.


தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு: 



  • வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்:

  • பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.வேகவைத்த தண்ணீர் குடிப்பது நல்லது. சோப்புகளை கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது நோய் வராமல் தடுக்க, வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

  • யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு சுகாதார மையம் மூலம் சிகிச்சை பெற வேண்டும். ஒரே மாதிரியான நோய்த்தொற்று தென்பட்டால், அதனை உடனடியாக மருத்துவ முகாம் அல்லது மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும்.

  • வதந்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியார் டேங்கர் லாரி திறந்தவெளி குளங்களில் / திறந்தவெளி கிணறுகள் தண்ணீர் சேகரிப்பதை மக்கள் கவனித்தால் அது குறித்து பொது சுகாதாரத் துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இந்த நீர் பாதுகாப்பானது அல்ல என்பதால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீர்:  



  • சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் அளவு 2 PPM ஆக இருக்க வேண்டும் (OHT) மற்றும்தெரு குழாய் / வீட்டு குழாயில் 0.5 PPM இருக்க வேண்டும்.   

  • தொட்டி / சம்ப் தண்ணீரை குளோரினேஷன் செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்றவும்: ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கும் 4 கிராம், 33% குளோரின் எடுத்து பக்கெட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

  • பின் வாளியில் 3/4 பங்கு வரை தண்ணீரை மெதுவாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். c. சுண்ணாம்பு மற்றும் பிற வண்டல்கள் வடிகட்ட 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். சூப்பர்நேட்டன்ட் குளோரின் தண்ணீரை மற்றொரு வாளிக்கு மாற்றி மேல்நிலை தொட்டி / சம்ப்பில் கலக்க வேண்டும்.இந்த தண்ணீரை ஒரு மணி நேரம் கழித்து பயன்படுத்தலாம்.

  • உடைந்த பைப் லைன்களை சரி செய்து, ஏதேனும் கசிவுகள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.  


தற்காலிக தங்குமிடங்களில் சுகாதார நடவடிக்கைகள்:  



  • தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்பவர்கள் முகாமில் வழங்கப்படும் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.5.2 மக்கள் கழிப்பறை வசதிகளை பயன்படுத்த வேண்டும். கழிப்பறை இல்லை என்றால், அவர்கள் முகாம் பொறுப்பாளரிடம் தற்காலிக கழிவறை அமைத்து தருமாறு கோரலாம்.ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தற்காலிக தங்குமிடங்களை கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.  


பூச்சிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:



  • குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே, குப்பை மற்றும்அழுகும் பொருட்களை உள்ளாட்சி மூலம் விரைவில் அகற்ற வேண்டும். இந்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.


கொசு கட்டுப்பாடு முறை:



  • டயர்கள், உடைந்த மண் பானைகள், தேங்காய் மட்டைகள், கழிவு பிளாஸ்டிக் பாத்திரங்கள்மற்றும் கட்டுமான தளத்தில் நீர் தேக்கம் போன்றவற்றில் கொசுக்களின் இனப்பெருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும் எனவே பயன்படுத்தப்படாத கொள்கலன்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.


இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அகற்றுதல்:  



  • இறந்த விலங்குகள் அல்லது பறவைகள் கவனிக்கப்பட்டால், அது குறித்து தகவல்கள் வழங்கப்பட வேண்டும். நகராட்சிகள் / உள்ளாட்சி அமைப்புகள் உடல்களை கைப்பற்றி புதைத்து கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்படும்.  

  • 19 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். வேறு தடுப்பூசி செலுத்த 4 வாரங்களுக்கு முன் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.