தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இன்று பத்திரப்பதிவ, வணிகவரி மற்றும் கைத்தறித்துறைகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது அனுமதி பெற்று பேச்சைத் தொடங்கிய பாஜகவின் வானதி சீனிவாசன், ''மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியை ஆன்லைனில் விற்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதனைக் குறிப்பிடும் விதமாக பேச்சைத் தொடங்கிய வானதி, ''ஆண்கள் கையில் கிடைக்கும் வருவாய் கூட பிடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும் ஆனால் பெண்கள் கையில் கிடைக்கும் பணம் முழுக்க முழுக்க குடும்பத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது'' என்றார்.வானதியின் இந்தப்பேச்சுக்கு அவையில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பதிலளித்த வானதி, '' ஏன் கொதிக்கிறீர்கள்?நான் அனைத்து ஆண்களையும் குறிப்பிடவில்லை’’ என்றார். உடனடியாக குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர், '' சொல்ல வரும் விஷயத்தை நேரடியாக சொல்லுங்கள். இங்கு யாரும் கொதிக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.