கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பண்ணப்பட்டி அடுத்த சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் இவர் கூலி தொழிலாளி இவருக்கு  இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இளைய மகனான அழகு ராஜா (9) .  கொரோனா  நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அழகுராஜா தனது நண்பர்களுடன் விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 09 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அழகுராஜா அனைவரும் மதிய உணவு மேற்கொண்டு வரலாமென விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அழகுராஜா அப்போது எங்கு சென்றார், என்று தெரியவில்லை. மீண்டும் மாலை 5 அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் மற்றும் அவரது தாயார் தங்களது நாள்தோறும் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மூத்த மகன் வீரக்குமார் இடம் தம்பியைப் பற்றி கேட்டுள்ளனர். அவன் விளையாடிக் கொண்டிருப்பான் அப்பா என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டதாக தெரிகிறது. இரவு நேரம் நெருங்க நெருங்க அவன் வீட்டிற்கு வரவில்லை.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இதனால் சந்தேகமடைந்த அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் அக்கம், பக்கம் முழுவதும் தேடி உள்ளார். அதை தொடர்ந்து அவரது தாயார், அழகு ராஜாவின் அண்ணன் மற்றும் சகோதரி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு தெரிந்த உறவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். எங்கும் அவன் கிடைக்காததால் அருகிலிருந்த தோகைமலை போலீசாருக்கு இதைப் பற்றி புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் காணவில்லை என்ற அறிவிப்பை வெளியிடுகின்றனர். அந்த அறிவிப்பில் பெயர் அழகுராஜா வயது 9 , சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் என்ற இரண்டு அலைபேசி எண்ணையும் வெளியிட்ட பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் மறுநாள் 10ஆம் தேதி காலை முதல் அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் அழகுராஜாவில் தேட தொடங்கினர். எந்தத் துப்பும் கிடைக்காததால் அவர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணி அளவில் சுக்காம்பட்டியில் இருந்து ரங்காபுரம் செல்லும் சாலையில் உள்ள ஆறுமுகம் என்பவர் கிணற்றுக்கு எதிர்புறம் உள்ள ரோட்டில் மேற்குப்புறம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜா தான் அணிந்திருந்த ஆடைகள் முழுவதும்  நனைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அப்பகுதி வழியாக சென்ற அதே ஊரை சேர்ந்த முருகேசன் மகன் முனியப்பன் பார்த்து விட்டு அருகில் இருந்த கண்ணாயிரம் என்பவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். அந்த கண்ணாயிரம் அழகு ராஜாவின் அண்ணன் வீரக்குமாருக்கு தகவல் தெரிவிக்க வீரக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். இறந்து கிடப்பது எனது தம்பி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அக்கம்,பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தோகைமலை போலீசார் விரைந்து வந்து அழகு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.