விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (21) இவர் ராணுவ ஆட்கள் சேர்ப்பு முகாமில் தேர்வு பெற்றுள்ளார். திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவி ஒருவரை தயாளன் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவியும் தயாளனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி உள்ளனர். இந்த நிலையில் மாணவி இரண்டரை மாதம் கர்ப்பமான தககவல் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை மனுவை நிராகரித்த மத்திய அரசின் உத்தரவு ரத்து



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாளை மறுநாள் முதல் 18ஆம் தேதி வரை பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை


இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலைய போலிசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தயாளனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கர்ப்பமான 12ஆம் வகுப்பு மாணவியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தமிழகத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது’ - மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி


 



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பழனி முருகன் கோயிலில் 17 நாட்களில் நிரம்பிய உண்டியல் - 4.33 கோடி காணிக்கை வசூல்


அதேபோல் திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவரை கலசப்பாக்கம் அடுத்த சங்கர் பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி அஜித் குமார் (20) என்பவர் காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் பிரிந்த நிலையில், 14 வயது சிறுமியின் புகைப்படத்தை கூலித்தொழிலாளி அஜித் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் அஜித் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர். 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- டிசம்பரில் பெய்த திடீர் கனமழையால் மகசூல் வீழ்ச்சி - ஏக்கருக்கு 15 மூட்டைகளே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை