தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.


22.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


23.05.2023 முதல் 25.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை :


22.05.2023: உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கீழ் தான் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஈரோட்டில் – 39.4 டிகிரி செல்சியஸ், திரூச்சி – 39.3 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை மற்றும் கரூர் – 39 டிகிரி செல்சியஸ், சேலம் – 38.7 டிகிரி செல்சியஸ், வேலூர் – 38.2 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 38.0 டிகிரி செல்சியஸ், நாகை – 37.4 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டை – 37.3 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.


சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸாகவும், நுங்கம்பாக்கத்தில் – 35.6 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இயல்பை விட வெப்பநிலை அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டாலும் தேனி, பென்னகரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் வானம் அவ்வப்போது மேக மூட்டமாக காட்சியளிக்கிறது. கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.9 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Annamalai: '2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. தமிழ்நாடு மண்ணில்தான் என் அரசியல்' - அண்ணாமலை


The Kerala Story: 'கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி' - தி கேரளா ஸ்டோரி குறித்து ஆளுநர் ட்வீட்..!