தமிழ்நாடு:
பொங்கல் பரிசுத்தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
பட்டியலினத்தவர், பழங்குடியினர் எனக் கூறி போலிச்சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- திருச்சி ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, சேலம் மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டம்
- வேலையிழந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
- தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்
இந்தியா:
- மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்பின் சாசன அமர்வு தீர்ப்பு - அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி
- பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மன் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
- இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை 782 கோடி அதிகரிப்பு
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 4 வயது சிறுவன் பலி
- ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
உலகம்:
- இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் சிரியாவில் விமான நிலைய சேவை பாதிப்பு - 2 வீரர்கள் உயிரிழப்பு
- பிலிப்பைன்ஸில் திடீர் மின்சேவை துண்டிப்பு - தலைநகர் மணிலாவில் உள்ள நினோய் அகினோ விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி
- 2023 ஆம் ஆண்டின் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை
- கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை - ஏற்கனவே நிரந்தரமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கு தடை பொருந்தாது என அந்நாட்டு அரசு அறிவிப்பு
- பிரேசில் அதிபராக 3வது முறையாக லூலா டா சில்வா பதவியேற்பு
சினிமா:
- தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற லவ் டுடே படத்தை ரீமேக் செய்வதாக வெளியான தகவல் தவறானது - தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்
- அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நடித்த ஜெர்மி ரன்னர் பனிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி படுகாயம்
- தகுதியானவர்களுக்கு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி - தேர்வுக்குழுவை மாற்றியமைக்குமாறு உத்தரவு
விளையாட்டு:
- பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நாளை அடக்கம் - சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து விட்டதாக இந்திய கிரிக்கெட் சம்மேளன செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு - சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்க திட்டம்