திமுக தலைமையிலான அரசு கடந்த மே மாதம் பதவியேற்ற பிறகு அவ்வப்போது சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் முதல் வெள்ள பாதிப்பு வரை பல விஷயங்களில் அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வண்ணம் உள்ளது. அத்துடன் அவ்வப்போது அரசு அதிகாரிகளையும் அதிரடியாக மாற்றியும் பதவி உயர்வு வழங்கியும் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. 


அதன்படி தற்போது 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியமான பதவி உயர்வை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையின்படி தமிழ்நாடு அரசின் ஏரிசக்தி துறை, சமுதாய நலத்துறை மற்றும் பெண்கள் மேம்ப்பாட்டு துறை ஆகியவற்றில் கூடுதல் தலைமை செயலர் பதவிகள் ஓராண்டு அல்லது பணி அவசியம் உள்ள வரை புதிதாக உருவாக்கப்படுகிறது. மேலும் 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்திற்கு பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: சாத்தான்குளம் விவகாரத்தை சல்லடை போட்டு வெளிப்படுத்திய பத்திரிகையாளர் பிரபாகருக்கு Red Ink விருது!




அதன்படி 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளான ராமசந்திரன் ஐஏஎஸ், கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ், ரமேஷ் சந்த் மீனா ஐஏஎஸ், முருகானந்தம் ஐஏஎஸ், சந்திரகாந்த் பி காம்ப்ளே ஐஏஎஸ், சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் மற்றும் ஷம்பு கலோலிகர் ஐஏஎஸ் ஆகிய 7 பேருக்கும் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாடு அரசு தொடர்ந்து இதுபோன்று எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தற்போது ஒரே நேரத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கியுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சிறப்பாக பணியாற்றுவார்களா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை எந்த துறையில் இருக்கும் என்பது ஆர்வலர்களின் அடுத்த கேள்வியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண