விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5647 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 5647 கன அடி நீர் ஒன்பது மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

வீடூர் அணை

வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

புரட்டி போடும் வடகிழக்கு பருவமழை 

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம், வானூர், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது. கனமழையினால் ஏரி குளங்கள் நிரம்பி வருகிற நிலையில் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் அணையும் நிரம்பி நேற்றைய தினம் திறக்கப்பட்டது.

Continues below advertisement

முழு கொள்ளளவை எட்டிய அணை

வீடுர் அணையானது 15,800 அடி நீளமும், 37 அடி உயரமும் கொண்டுள்ள இந்த அணையின் நீர்மட்டம் பிடிப்பு 32 அடி என்பதால் முழு கொள்ளவை அனை எட்டியதால் முதல் கட்டமாக மூன்று மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வெளியேற்றற்பட்டன. அணையில் நீர் திறகப்பட்டுள்ளதால் சங்கராபரணி ஆற்றின் கரையோரப்பகுதிகளில்

பொம்பூர், கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சில இடங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 5647 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அனையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5647 கன அடி நீர் ஒன்பது மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

வானிலை மையம் எச்சரிக்கை:

மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு - வட மேற்கு இன்று நகர்ந்து செல்லக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,