தமிழ்நாட்டில் மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று - தமிழ்நாடு நிலவரம்:
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,626 ஆக உள்ளது.
உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இப்போது, கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டியது அவசியம்
நுரையீரல் ஆரோக்கியம்
நுரையீரல் அல்வியோலி எனப்படும் மில்லியன் கணக்கான சிறிய காற்றுப் பைகளால் ஆனது, அவை இரத்த ஓட்டத்திற்கும் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இடையில் வாயுக்களை பரிமாறிக் கொள்கின்றன. சளியை உற்பத்தி செய்வதன் மூலமும், சுவாசக் குழாயில் இருந்து நச்சுகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை அகற்றுவதன் மூலம் உடலின் pH சமநிலை மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை பராமரிக்கின்றன. கொரோனா முதலில் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால், நுரையீரல் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகிறது. நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால், கடுமையான நோய் அல்லது வைரசால் ஏற்படும் சிக்கல்களின் அபாயம் குறைகிறது.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்:
புகைபிடிக்க வேண்டாமே!
புகைபிடித்தல் சுவாச மண்டலத்தை சேதப்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இது கொரோனா உட்பட பல தொற்றுநோய்கள் மிகவும் எளிதில் பாதிக்க வழி வகுக்கிறது. ஆரோக்கியமான நுரையீரலை பேன நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் புகைபிடிப்பதை கைவிடுவதாகும்.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சி
ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் திறனை மேம்படுத்தும். சுவாச தசை வலிமையை மேம்படுத்தவும் உதவும். உதரவிதான சுவாசம் (diaphragmatic breathing) அல்லது பர்ஸ்டு-லிப் சுவாசம் போன்ற நுட்பங்களை தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.
இதோடு ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவற்றையும் பின்பற்ற வேண்டும்.
மேலும் வாசிக்க..
குழந்தைக்கு முதல் ஹேப்பி பர்த்டே.. இன்ஸ்டாவில் நெகிழ்ந்த காதல்... வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..