நடிகை காஜல் அகர்வால் தன் குழந்தை நீலின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


மகதீரா, நான் மகான் அல்ல, துப்பாக்கி ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து, கோலிவுட், டோலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.  


சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், 2021ஆம் ஆண்டு கருவுற்றார். 


மேலும், ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தி தான் கருவுற்றிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை காஜல் தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.  ஏப்ரல் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தங்கள் குழந்தைக்கு நீல் என காஜல் - கௌதம் தம்பதி பெயர் சூட்டினர். மேலும் தங்கள் குழந்தையில் புகைப்படங்களை முழுமையாக முகம் தெரியாமல் இன்ஸ்டா பக்கத்தில் இத்தம்பதி பகிர்ந்து வந்தனர்.


இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் குழந்தையின் முகம் முழுமையாகத் தெரியும் வகையில் புகைப்படம் பகிர்ந்து தன் ரசிகர்களை காஜல் மகிழ்வித்திருந்தார். 


இன்று காஜலின் குழந்தை நீல் தன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தன் குழ்ந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை காஜல் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மஞ்சள் உடை அணிந்து காஜலின் குழந்தை சிரிப்பை பிரதி எடுத்தாற்போல் அவ்ரது குழந்தை உள்ள நிலையில், இந்தப் புகைப்படத்தில் நடிகைகள் ராஷி கண்ணா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 






மேலும் காஜலின் ரசிகர்களும் உற்சாகமாக இந்தப் புகைப்படத்தில் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். 


தாயான பின்பு தற்போது இரண்டாவது ரவுண்டுக்குத் தயாராகி வரும் காஜல், தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளது வருகிறார். காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக நடிக்கும் நிலையில், அவருக்கு மேக் அப் போட மூன்றரை மணி நேரம் ஆவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய், அமீர் கான், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரை காஜல் அகர்வால் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தார். 


நடிகர் விஜய் இந்தப் பட்டியலில் 22வது இடத்தைப் பிடித்த நிலையில், காஜல் அகர்வால் 15வது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.