தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


மாநில தொழில்கள் ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வுரும் அனீஷ் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கார்மேகம் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளர் பாலசுப்பிரமணின் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த சிவராசு, திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பணியிடம் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதன்படி, மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.