தமிழ்நாட்டில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில், நேற்றைய தினம் கொரோனா காரணமாக ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா:


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 542 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 521 பேர் வீடு திரும்பியுள்ளனர். தினசரி தொற்று பாதிப்பை விட சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதனால் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,640 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிங்கப்பூரிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 6,827 ஆர்டிபிசிஆர் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 491 மாதிரிகளில் தொற்று கண்டறியப்பட்டது.


குறைவா? அதிகரிப்பா?


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில் 248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 782 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், திருப்பூர் – 11.2%, கோவை – 11.6%, செங்கல்பட்டு – 10.7%, கன்னியாகுமரி – 9.4%, சென்னை- 9.3 %, திருவள்ளூர் – 9.1% ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவின் ஒமிக்ரான் வகை வைரஸின் மாறுபாடான  Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 69 நாட்களுக்கு பின் நேற்று இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவானது. மேலும் தமிழ்நாட்டில் இது சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் குறைவாக இருந்தாலும் சமூக பரவலாக மாறாமல் இருக்க மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை தரப்பில் அறிவிறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவல் காரணமாக ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் மக்கள் கட்டாயம் அணீய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


Labours Strike: 12 மணி நேர சட்டமசோதா நிறுத்திவைப்பு: தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக நிறுத்தம்


Chithirai Festival: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா; மதுரை மாவட்டத்துக்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை..! ஏன் தெரியுமா?