இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமை, 4வது சனிக்கிழமை, மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால், இந்த அக்டோபர் 2021-இல் 21 நாட்கள் விடுமுறையாகும். இந்த 21 நாட்களில், ரிசர்வ் வங்கியின் பட்டியலின் படி, அவற்றில் 14 நாட்கள் மட்டுமே விடுமுறை. மற்ற 7 நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்களாகும். அதோடு இந்த 14 நாட்கள் விடுமுறை நாட்களும் அனைத்து மாநிலங்களுக்கும் அல்ல. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம். ஆக எந்த மாநிலத்தில் எப்போது விடுமுறை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.



அக்டோபர் 1, 2021 - வெள்ளிக்கிழமை - வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (சிக்கிம்)


அக்டோபர் 2, 2021 - சனிக்கிழமை - காந்தி ஜெயந்தி (பொது விடுமுறை)


அக்டோபர் 3, 2021 - ஞாயிற்றுக்கிழமை


அக்டோபர் 6, 2021 - புதன்கிழமை - மஹாளய அமாவாஸ்யை (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா)


அக்டோபர் 7, 2021 - வியாழக்கிழமை - லைனிங்தோ சனமஹி (இம்பால்)


அக்டோபர் 9, 2021 - இரண்டாவது சனிக்கிழமை


அக்டோபர் 10, 2021 - ஞாயிற்றுக்கிழமை


அக்டோபர் 12, 2021 - செவ்வாய்க்கிழமை - துர்கா பூஜை (மகாசப்தமி) - (அகர்தலா, கொல்கத்தா)


அக்டோபர் 13, 2021 - புதன்கிழமை - துர்கா பூஜை (மகா அஷ்டமி) - (அகர்தலா, கொல்கத்தா, புபனேஷ்வர், குவகாத்தி, இம்பால், பட்னா, ராஞ்சி., சிக்கிம்)


அக்டோபர் 14, 2021 - வியாழக்கிழமை - துர்கா பூஜை/ தசரா/ மஹா நவமி, ஆயுத பூஜை (மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஓடிசா, நாகாலாந்து, மேகாலாந்து, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம்)


அக்டோபர் 15, 2021 - வெள்ளிக்கிழமை - துர்கா பூஜை, தசரா அல்லது விஜய தசமி (மணிப்பூர், இமாச்சல பிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)


அக்டோபர் 16, 2021 - சனிக்கிழமை - துர்கா பூஜை அல்லது தாசைன் (சிக்கிம்)


அக்டோபர் 17, 2021 - ஞாயிற்றுக்கிழமை


அக்டோபர் 18, 2021 - திங்கட்கிழமை - கதி பிஹு (குவகாத்தி - அசாம்)


அக்டோபர் 19, 2021 - செவ்வாய்க்கிழமை - ஈத்-இ-மிலாத் அல்லது முகமது நபியின் பிறந்தநாள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்)


அக்டோபர் 20, 2021 - புதன் கிழமை - மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்)


அக்டோபர் 22, 2021 - வெள்ளிக்கிழமை - ஈத்-இ-மிலாத்-நபி (ஜம்மு-காஷ்மீர்)


அக்டோபர் 23, 2021 - நான்காவது சனிக்கிழமை


அக்டோபர் 24, 2021 - ஞாயிற்றுக்கிழமை


அக்டோபர் 26, 2021 - சேர்க்கை நாள் (ஜம்மு காஷ்மீர்)


அக்டோபர் 31, 2021 - ஞாயிற்றுக்கிழமை



மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:


அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி


அக்டோபர் 9 - இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை


அக்டோபர் 14 - மகா நவமி விடுமுறை


அக்டோபர் 15 - விஜய தசமி விடுமுறை


அக்டோபர் 19 - மிலாடி நபி


அக்டோபர் 23 - நான்காம் சனிக்கிழமை விடுமுறை


வழக்கம் போல எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை. இந்த அக்டோபர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வங்கிகளில் விடுமுறை நாட்களில் உங்களது பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.