மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.


Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?


இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு  அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.




குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் குடி நீர் பாட்டில்கள், திண்பண்டங்களில் அதிகளவில் நெகிழி பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே கொடைக்கானல் நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பாடில்களில் குடி நீர் பயண்படுத்துவது குறிப்பாக கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது,




  காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி


கொடைக்கானல் பகுதிகளில் சென்னை உயர்நீதி மன்றம் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழி ,தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்கள் வைத்து இருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வரி விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது-மாவட்ட ஆட்சியர்.