விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றி வந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர். நகரில் இருந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
Virudhunagar Fire Accident: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரம் : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
குலசேகரன் முனிரத்தினம் | 24 Jan 2024 12:38 PM (IST)
Virudhunagar Fire Accident: விருதுநகரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து (மாதிரி படம் )