கரூரில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது தாக்குதல் நடத்திய வழக்கில் 18 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 18 நபர்களுக்கு ஜாமீன் இரண்டு நீதிபதிகள் வழங்கியுள்ளனர். கரூர் ஜே எம் -1 நீதிபதி அம்பிகா 11 நபர்களுக்கு வழங்கிய ஜாமீனில் வேலூர் மாவட்டம், வடக்கு ஆற்காடு காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும் கரூர் மகிளா நீதிபதி சுஜாதா 7 நபர்களுக்கு வழங்கிய ஜாமீனில் கடலூர் மாவட்ட டவுன் காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் எனவும் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளார்.
இந்நிலையில் அவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது கரூர் ஜே எம் -1 மற்றும் மகிளா நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர்.
கரூர் கோவை சாலையில் உள்ள அமைச்சரின் நண்பரின் கொங்கு மெஸ்ஸில் பூட்டின் சீல் உடைத்து சோதனை தொடங்கப்பட்டது.
இதில் அமைச்சரின் நண்பர் கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்ரமணி உணவகம் (கொங்கு மெஸ்) சோதனைக்கு சென்றபோது ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரூர் கோவை சாலையில் உள்ள வருமானவரித்துறையினால் ஐந்து நாட்கள் முன்பு உணவகத்தில் வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு நான்கு கார்களில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.