IPS Transfer: தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - மேற்குமண்டல ஐ.ஜி., ஆக செந்தில்குமார் நியமனம்
IPS Transfer: நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Continues below advertisement

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Source : Special Arrangement - ABP Network
IPS Transfer: தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்குமண்டல ஐ.ஜி. ஆக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Continues below advertisement
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:
- சிபிஐ சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., ஆக இருந்த சைலேஷ் குமார் யாதவ், காவலர் வீட்டு வசதி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சிபிஐ சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த தினகரன், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- மேற்குமண்டல ஐ.ஜி., ஆக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- மேற்குமண்டல ஐ.ஜி. ஆக இருந்த பவானீஸ்வரி, காவல்துறை மேம்பாட்டு பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காவல்துறை மேம்பாட்டு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
- மாநில மனித உரிமைகள் ஆணைய ஐ.ஜி., ஆக இருந்த மஹேந்திர குமார் ராதோட், சமூக நீதி & மனித உரிமைப்பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்
- சமூக நீதி & மனித உரிமைப்பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த சாமூண்டீஸ்வரி, சட்டம் & ஒழுங்கு ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்
- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி குற்றப்பிரிவு ஐ.ஜி., ஆக நியமனம்
- நெல்லை ஆணையராக இருந்த மூர்த்தி நெல்லை சரக டி.ஐ.ஜி., ஆக நியமனம்
- சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணயராக பிரவேஷ்குமார் நியமனம்
- வேலூர் சரக டி.ஐ.ஜி., ஆக தேவராணி நியமனம்
- சென்னை பெருநகர கிழக்கு இணைய ஆணையராக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம்
- காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி., ஆக நஜ்முல் ஹூடா நியமனம்
- அபிஷேக் தீக்ஷித் சென்னை ரயில்வே டி.ஐ.ஜி., ஆக நியமனம்
- அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக நியமனம்
- ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக இருந்த துரை, காவலர் நல்வாழ்வு பிரிவு டி.ஐ.ஜி., ஆக நியமனம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.