வந்தாச்சு அறிவிப்பு... கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக்கடன் தள்ளுபடியானது

Continues below advertisement

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக்கடன் தள்ளுபடியானது. 

Continues below advertisement

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 14.40 லட்சம் நபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி

திமுக தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழே நகை வைத்துள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடைபெற்று இருப்பதும், பல வங்கிகளில்  போலி நகைகள் வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தகுதியான நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன்

இதையடுத்து, நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

மேலும், ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து அதற்கான தகுதிகள் குறித்தும், கடன் தள்ளுபடி பெறுவதற்கு எந்தெந்த நபர்களுக்கு தகுதி இல்லை என்பது குறித்தும் கூட்டுறவுதுறை பதிவாளர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு தள்ளுபடி கிடையாது எனவும், 28% நபர்களின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்றும், குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

பட்ஜெட்டில் நகைக்கடன்

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற நபர் மற்றும் அவரது  குடும்ப உறுப்பினர்களுக்கு பொது நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: LKG, UKG Class: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி தொடர்ந்து செயல்படும்..! கடும் எதிர்ப்பால் ஜகா வாங்கிய பள்ளிக்கல்வித்துறை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement