முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சிகளை நல்ல முறையில் கையாண்டுவருவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.  

 

                     

 

முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை எவ்வாறு  கையாளுகிறார்? 

   சிறப்பாக கையாண்டார்   சரசாரியாக இருந்தது  மோசமாக கையாண்டார்  பதில் இல்லை  மொத்த எண்ணிக்கை
அதிமுக + பாஜக கூட்டணி  65.7%   24.6% 7.0% 2. 7%   100.0%
திமுக + காங்கிரஸ் கூட்டணி  72.2%    17.3% 7.4% 3.1%   100.0%
 அமமுக  46.2%   23.1% 25.6%   5.1%   100.0%
 மக்கள் நீதி மய்யம் 41.4%   24.1% 13.8% 20.7%   100.0%
நாம் தமிழர்  39.5%  26.7% 18.6% 15.1%   100.0%
இதர கட்சிகள்  47.8%    23.9% 8.7% 19.6%   100.0%
மொத்தம்  66.3%   21.0% 8.3% 4.3%   100.0%

'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி, 66.3 சதவீத வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளை மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக யையாண்டதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு தெரிவித்ததில்,72% வாக்காளர்கள் திமுக கூட்டணி கட்சி வாக்களார்கள் என்பதும், 65% வாக்காளர்கள் அதிமுக கூட்டணி கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.சரசியரியாக 8.3% பேர் மட்டுமே அரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு தெரிவித்தவர்களில், 25.6% பேர் அமமுக கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

எதிர்க்கட்சிகள் : மக்களால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கவனித்து அச்செயற்பாடுகளின் சாதக பாதகங்கள் குறித்து சட்டப்பேரவையின் கவனத்துக்குக் கொண்டு வருவதும், கேள்வி எழுப்புவதுமே எதிர்க்கட்சிகளின் பணியாக உள்ளது. அரசின் செயற்பாடுகள் மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் பாதகமில்லாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் அடிப்படை நோக்கம்.  மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்துவதும், வெகுஜன மக்களை அரசியல்படுத்துவதும் எதிர்க்கட்சிகளின் முதன்மையான பணி.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆளுங்கட்சிக்கு நிகரான எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இத்தகைய போக்கு காணப்படுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் முனவைக்கப்படுகின்றன. 

இங்கிலாந்தில் திறமையான எதிர்க்கட்சி அமைய 700 ஆண்டுகள் ஆனது. அமெரிக்கா 300 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இருப்பினும், மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் வகையில் வெறும் 75 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன.

முதலாவதாக, மேற்கத்திய நாடுகளில் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு உருவாகுவதற்கும் (Party Systems), இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் கட்சி உருவாகுவதற்கும் வாரலாற்று காரணங்கள் வேறுபடுகின்றன. மேற்கத்திய நாடுகளில், வெகுஜன் அரசியல் உருவாகுவதற்கு முன்பே, பொருளாதார ரீதியாக (முதலாளித்துவம் vs சமத்துவுடமை), சமூக ரீதியாக ( ஊரகம் vs நகர்புரம்), மதரீதியாக (கத்தோலிக்கம் vs புரோட்டஸ்டன்ட்) போன்ற வேறுபாடுகள் உருவாகிவிட்டன. இந்த, வேறுபாடுகளை கலந்து பேசுவதற்கான களமாக அரசியல் கட்சி உருவானது. ஆனால், சுதந்திரத்திக்கு முந்தைய இந்தியாவில், அரசியல் கட்சி பெரிய விசயமாக இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சி ஒரு இயக்கமாக நின்று தான் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் காரணமாகத் தான், சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில்  காங்கிரஸ் இயக்கத்தை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி தெரிவித்தார்.      

                          

தமிழ்நாடு எதிர்க்கட்சிகள்:   தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமரசனங்கள் முன்வைக்கப்படுகின்றன.   மேற்கத்திய நாடுகளைப் போல் அல்லாமல், தமிழ்நாட்டில் அரசியல் தன்னிச்சையாக இயக்கி வருகிறது. ஒபிசி, எம்பிசி போன்ற  சமூகப் பிரிவுகளை அரசியல் உருவாக்கி வருகிறது. அரசியல் கட்சி என்ற வகைப்பாட்டைத் தாண்டி விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி. புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தங்களை சமூக இயக்கங்களாகவே காட்டிக் கொள்கின்றன. எனவே, சட்டப்பேரவையை முடக்குவது, போராடுவது, அரசாங்கத்தை எதுவும் செய்யவிடாமல் எதிர்ப்பது போன்ற செயல்களின் மூலம் தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றன. 

மேலும், எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.   

சட்டப்பேரவை   ஆளும்கட்சி  எதிர்கட்சி 
1952 மெட்ராஸ் சட்டப்பேரவை   இந்திய தேசிய காங்கிரஸ் (152) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (62)
1957 மெட்ராஸ் சட்டப்பேரவை   இந்திய தேசிய காங்கிரஸ் (151) திமுக (13)
1962 மெட்ராஸ் சட்டப்பேரவை   இந்திய தேசிய காங்கிரஸ் (139) திமுக (50)
1967 தமிழ்நாடு சட்டப்பேரவை  திமுக (137) இந்திய தேசிய காங்கிரஸ் (51)
1971 தமிழ்நாடு சட்டப்பேரவை  திமுக (184) இந்திய தேசிய காங்கிரஸ் (நிறுவனம்) - 15
1977 தமிழ்நாடு சட்டப்பேரவை   அதிமுக (130) திமுக (48)
1980 தமிழ்நாடு சட்டப்பேரவை   அதிமுக (129) திமுக (37)
1984 தமிழ்நாடு சட்டப்பேரவை அதிமுக (132) இந்திய தேசிய காங்கிரஸ் (61)
1989 தமிழ்நாடு சட்டப்பேரவை   திமுக (150) அதிமுக (ஜெயலிதா அணி) 27
1991 தமிழ்நாடு சட்டப்பேரவை அதிமுக (168) இந்திய தேசிய காங்கிரஸ் (65)
1996 தமிழ்நாடு சட்டப்பேரவை  திமுக (173)  தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) - 39
2001 தமிழ்நாடு சட்டப்பேரவை அதிமுக (132) திமுக (31)
2006 தமிழ்நாடு சட்டப்பேரவை திமுக (96) அதிமுக (61)
2011 தமிழ்நாடு சட்டப்பேரவை  அதிமுக (150) தேமுதிக (29)
2016 தமிழ்நாடு சட்டப்பேரவை  அதிமுக (136) திமுக (89)

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை 

திமுக (133) அதிமுக (66)

கடந்த 70 ஆண்டுகால தமிழக அரசியலில்,  2006 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர்த்து, அனைத்து தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் மட்டும் தான், சட்டப்பேரவையில் திமுக, அதிமுக நேரெதிராக ஆளுங்கட்சி, எதிர்காட்சியாக செயல்பட்டுள்ளன. 

 1971,1984,1991 ஆகிய மூன்று காலங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்காட்சியாக இருந்தாலும், அது ஆளுங்கட்சியுடன்  கூட்டணியில்  இருந்து தேர்தலை சந்தித்தது.  1996 சட்டபேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில்  அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற தேமுதிக எதிர்க்கட்சிகளான செயல்பட்டன. எனவே, திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வந்த எதிர்க்கட்சிகள் அரசின் அச்செயற்பாடுகளின் சாதக பாதகங்கள் குறித்து வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கை வில்லை.  ஆனால், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அஇஅதிமுக திமுக அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் மனநிலையில் உள்ளது. இதை, மு.க ஸ்டாலின் பரந்த மனதுடன் வரவேற்க தயாராகவே உள்ளார். அதைத் தான், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.