கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நூறு நாட்களில் திறம்பட கையாண்டதாக மாநிலத்தின் அநேக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.   

கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.  

 

                     

 

முதல் 100 நாட்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை எப்படி இருந்தன?    

  மிகச் சிறப்பு  சிறப்பு  சரசாரி  மோசம்  பதில் இல்லை  மொத்த எண்ணிக்கை 
அதிமுக + பாஜக கூட்டணி  56.2%     17.4% 9.4% 8.0%  8.9%   100.0%
திமுக + காங்கிரஸ் கூட்டணி  58.6%   25.2%  7.4%  5.2% 3.7% 100.0%
 அமமுக  37.0%    20.5% 23.3% 8.2%  11.0% 100.0% 
 மக்கள் நீதி மய்யம் 26.1%     18.8%  8.7% 34.8% 11.6%    100.0%
நாம் தமிழர்  26.6%    23.1% 8.7% 15.0% 26.6% 100.0%
இதர கட்சிகள்  32.5%     26.0% 15.6% 13.0% 13.0%  100.0%
மொத்தம்  53.2%     21.7% 9.0% 8.0% 8.0% 100.0%

'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி,  53.2 சதவீத வாக்காளர்கள் திமுக அரசின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர். 22.3% வாக்காளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்  மு.க ஸ்டாலின் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். சரசியரியாக 8% பேர் மட்டுமே அரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த 7.7% பேரில், 34.8% பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

முதல்வராக பதவியேற்பு:  கடந்த மே 7ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக மு.க ஸ்டாலின் பதிவியேற்றார். கொரோனா தொற்று காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகளை முழு வேகத்துடன் இயக்கி அதன் பிடியிலிருந்து மாநிலத்தை விடுவிப்பது தனது முதல் பணி என்றும் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டார். 

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை பிப்ரவரி மாத நடுப்பகுதியில் தொடங்கியது. மகராஷ்டிரா, டெல்லி, குஜராத் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொரோனா நெருக்கடியை ஆரம்பக் கட்டத்திலே சந்திக்கத் தொடங்கின. ஆனால், தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கொரோனா இரண்டாவது தொற்று பரவல்  வேகமெடுக்கத் தொடங்கியது. எனவே, மற்ற மாநிலங்களை விட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் இருந்தது. இருந்தாலும், பிப்ரவரி 26ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து, புதிய அரசு பொறுப்பேற்கும் (மே- 7) வரை தமிழகத்தில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்தது. 

வாக்குப்பதிவு (ஏப்ரல் - 6) நாளன்று மாநிலத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3,500ஆக இருந்த நிலையில், வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்ற நாளன்று 20,000க்கும் அதிகமான பாதிப்பை பதிவு செய்தது. மே 7ம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற தினத்தன்று, 1,17,405 பேர் கொரோன நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். சென்னை, செங்கல்பட்டு, கோயம்பத்தூர், ராணிபேட்  ஆகிய மாவட்டங்களிலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிராணவாயு படுக்கைகள் அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.  

மருந்துகளின் இருப்பு குறித்தும் மத்திய அரசிடம் தெளிவான பதில் இல்லை . ரெம்டெசிவிர் உள்ளிட்ட அத்தியாவசிய  மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது.  தடுப்பூசியும் 45 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்தோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. எனவே, துரிதமான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு இருந்தது. 

கையாண்ட விதம்:  கொரோனா நெருக்கடியை மு.க ஸ்டாலின் தலைமையின் கீழ் திறம்பட கையாண்டது. நெருக்கடியை முன்கூட்டியே சுதாரித்த அவர், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அயராது முனைப்போடு செயல்பட்டார். ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், சட்டமன்ற கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது.நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த குழு அளித்த பல்வேறு ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.          

மேலும், பொது முடக்கநிலை அமல் காலத்தில், கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4000 மற்றும் 14 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை குடும்ப அட்டைத் தாரர்களுக்கு வழங்கினார்.  

தேவை அதிகரிப்பால், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் இருந்தன. அப்படியே படுக்கைகள் இருந்தாலும், அதை பற்றிய நிகழ்நேர தகவல்கள் தேவைப்படுவோருக்கு உடனடியாக கிடைப்பதில்லை.  எனவே, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் விநியோகம் குறித்த நிலவரங்களை  ஆன்லைன் மூலம் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழக அரசு ஒருங்கினைந்த கட்டளை மையத்தை (UCC War Room) உருவாக்கியது. இந்த மையம் அனைத்து மாவட்டங்களிலும் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.  


தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாகுறையை போக்க ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்ள உமாநாத் ஐஏஎஸ், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், கே.நந்தகுமார் ஐஏஎஸ், தாமரை கண்ணன் ஐபிஎஸ், பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்தனர்.  தமிழ்நாடு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட்டது. இவரின், ஆட்சிக் காலத்தில் தான் மாவட்ட அளிவில் மேற்கொள்ளப்படும்  தினசரி  கொரோனா பரிசோதனை குறித்த விவரங்கள் வெளியாகத் தொடங்கியது.