தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று சமீபத்தில் தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி நிறைவு பெற்றது.


தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசுப்பணம் வழங்கப்படாதது, தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த செயல்பாடுகளால் எந்தெந்த கட்சியினர் அதிகளவில் அதிருப்தி அடைந்தனர் என்பது ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


முதல்வரின் ஓராண்டில்  அதிருப்தியை ஏற்படுத்திய நடவடிக்கை : 



பொங்கல் பணம் வழங்காதது :




அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கலுக்கான பரிசுத்தொகையாக வழங்கிய பணம் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. இது தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் மத்தியில் 31.9 சதவீதம் அதிருப்தியை உண்டாக்கியது. அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் மத்தியில் 22.4 சதவீதம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.ம.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 41.2 சதவீதம் பேரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் 26.6 சதவீதம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மற்றவர்கள் 22.2 சதவீதம் பேர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 27.7 சதவீதம் பேர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து :


அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 31.9 சதவீதம் பேர் மத்தியிலும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 22.4 சதவீதம் பேர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 23.5 சதவீதம் பேர் மத்தியிலும், மக்கள் நீதிமய்யம் கட்சியினர் மத்தியில் 26.6 சதவீதம் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் மத்தியில் 14.3 சதவீதம் பேர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 21.4 சதவீதம் பேர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


சொத்து வரி உயர்வு :


தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி உயர்வு அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் மத்தியில் 15.7 சதவீதம் பேர் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள் 14 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 23.5 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யம் கட்சியைச் சார்ந்தவர்கள் 57.1 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 14.3 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் 33.3 சதவீதம் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மொத்தம் 17.6 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


அம்மா மினி கிளினிக் மூடல் :




எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் தி.மு.க. ஆட்சியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க.வின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. கூட்டணியினர் 7 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 8.4 சதவீதம் பேரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 14.3 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மொத்தம் 6.9 சதவீதம் பேர் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


முழு கருத்துக் கணிப்பு விவரம் : 



மேற்கண்ட எதுவுமில்லை :


மேற்கண்ட எதுவுமில்லை என்று தி.மு.க. கூட்டணியில் உள்ள 23.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள 32.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வினர் 11.6 சதவீதம் பேரும், மக்கள் நீதிமய்யத்தினர் 14.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 26.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் 44.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 26.4 சதவீதம் பேர் மேற்கண்ட எதுவுமில்லை என்று கூறியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண