கலை ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

ஆசிரியர்கள் தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆயுதங்களாக உள்ளனர். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கல்வியில் கலையும் ஒரு பகுதியாகும். இதற்காகவே தமிழக அரசு தனியாக இசைக்கல்லூரி, பல்கலைக்கழகம், திரைப்பட பயிற்சி கல்லூரி என கலைபண்பாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

அந்த வகையில் கலை ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கலைபண்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அயல்நாடுகளில் தற்காலிக கலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:கிராமிய நடன ஆசிரியர்கள்பரதநாட்டிய ஆசிரியர்கள்

Continues below advertisement

பணியிட விவரம்

* மியான்மர்* ரீயூனியன்* இந்தோனேசியா* சீஷெல்ஸ்* கம்போடியா" பிலிப்பைன்ஸ்* மாலத்தீவு* மலாவி* மொரிஷீயஸ்.* உகாண்டா

ஆகிய நாடுகளின் தமிழ்சங்கங்களில் பகுதி நேர கலைப்பயிற்சி வழங்க ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு கலையாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தகுதிகள்:ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.தகுதியும், கலைத் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை.

மாத ஊதியம் : ரூ 1.25 இலட்சம்

விண்ணப்பிக்க: https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்கடைசி நாள் : 31.12.2025 (மாலை 5.00 மணிக்குள்)விண்ணப்பம் முகவரி அனுப்ப வேண்டியபதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம், இராஜா அண்ணாமலைபுரம், - 600 028.