தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவற்காக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்பதால், கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தவும், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.