நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நீத் தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு மாணவர் குழுக்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜயை விமர்சித்து பேசியுள்ளது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மெளம் காக்கும் முதல்வர் விஜய்
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாதது மட்டுமில்லை அமைதி முறையில் போராடி வந்த மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை தடியடி நடத்தியுள்ளது நாடு முழுவதும் கோப அலைகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த போராட்டம் குறித்தும் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் தமிழக முதல்வர் விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காததை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் . மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்கள் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்படுவதை பலர் கண்டித்தும் வருகிறார்கள்.
மாணவி பேசிய வீடியோ வைரல்
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாணவர் குழுக்கல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது மாணவி ஒருவர் முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . இந்த வீடியோவில் அந்த மாணவி " நான் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டபோது பத்திரிகையாளர்கள் என்னை பேச சொன்னார்கள். இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பை . அப்படிபார்த்தால் நான் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜயைவிட அதிகமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறேன். " என்று அந்த மாணவி கூற மற்ற போராட்டக்காரர்கள் கைதட்டி சிரித்தனர்.
