சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலான 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள்  சென்னையிலிருந்து இயக்கப்படுகிறன. மேலும், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.



மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரையில், நாள்தோறும் இயக்கப்படுகிற பேருந்துகள் மறும் சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகிற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று, பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகிறன.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.


                                                 


பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேீருந்து நிலையத்தில் இருந்து மேற்குறி்ப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி ராமநாதபுரம்,சேலம், கோவை மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு ஏப்ரல் 6-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தினசரி இயக்கப்படுகிற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறன.