சேலம் மாநகராட்சியின் ஐந்தாவது மேயராக திமுக சார்பில் 6 வது வார்டில் போட்டியிட்ட ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற நிலையில், வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். 


சேலம் மாநகராட்சி ஐந்தாவது மேயராக அறிவிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன் யார் தெரியுமா?


இந்த நிலையில் நாளை நடக்கவிருக்கும் மேயர் தேர்விற்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. இதன்படி சேலம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவின் மூத்த உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


யார் இந்த ராமச்சந்திரன்?


ராமச்சந்திரன் ‌ 1944 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். தன் சிறுவயது முதலே இவருக்கு அரசியல் மீது ஒரு தனிப் பற்று இருந்து வந்தது. இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டு அண்ணாதுரை அவர்கள் காலகட்டத்தில் அண்ணா மீது இருந்த ஈர்ப்பின் மூலம் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அவர் திராவிட இயக்கத்தின் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார். பின்பு தனது முழு நேர அரசியல் பயணத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் அரசியல் ரீதியாக இவருக்கும் சென்னை மாநகரம் புரசைவாக்கத்தில் சேர்ந்த சிட்டி பாபுவிற்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரன் தொழில் நிமிர்த்தமாக சென்னை மாநகரம் சென்றார். அங்கு 3 ஆண்டு காலம் தங்கியிருந்து தொழிலை நடத்திவந்தார். அப்போது பல்வேறு இடங்களில் திராவிட கழகத்தின் கொடி கம்பத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார். புரசைவாக்கத்தில் சிட்டிபாபு அவருடன் இணைந்து ராமச்சந்திரன் அவர்கள் அமைக்கப்பட இருந்த கொடி கம்பத்திற்கான செலவில் தானாகவே முன்வந்து தனது செலவில் அமைத்துக் கொடுத்தார்.


அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடி ஏற்றுவதற்காக வந்திருந்த கலைஞர் கருணாநிதி அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கொடிக்கம்ப கல்வெட்டுகளிலும் கோரிமேடு ராமச்சந்திரன் என்ற பெயர் பதியப்பட்டு இருந்தை பார்த்து யார் அந்த கோரிமேடு ராமச்சந்திரன் என்று கழக நிர்வாகியிடம் கேட்டிருந்தார். பின்னர் மிசா சிட்டிபாபு அவர்களின் நினைவு இட தலைவர் கண்ணப்பன் என்பவர் மூலம் கலைஞர் கருணாநிதி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ராமச்சந்திரன் தலைவரே பார்க்க ஆவலுடன் சென்றார்.



கலைஞர் கருணாநிதி நேரில் சந்தித்தார் அப்போது கலைஞர் கருணாநிதி நீங்கள்தான் அந்த கோரிமேடு ராமச்சந்திரன் அவர்களால் என்று கேட்டு நலம் விசாரித்தார். உங்களது கழக செயல்பாடுகளும் ஆற்றலும் மிகவும் நன்றாக உள்ளது என பாராட்டி வாழ்த்து கூறினார். இதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் பகுதி செயலாளர் பலராமன் என்பவரது பணிமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட போது ராமச்சந்திரன் விருந்தினராக அந்த விழாவில் கலந்து கொண்டார் அன்று எதிர்பாராத விதமாக ஸ்டாலின் நேரில் சந்திக்கும் வாய்ப்பு ராமச்சந்திரனுக்கு கிடைத்தது.


சென்னையில் இருந்து மீண்டும் சேலம் வந்தடைந்தார் சேலத்திலும் தனது கழகப் பணியை தொடர்ந்து செய்துவந்தார். இதனையடுத்து சேலம் மாவட்ட ஒன்றிய செயலாளராக இருந்த A.L.தங்கவேலு அவரின் பரிந்துரைப்படி அப்போதைய சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டியார் 1984 ஆம் ஆண்டு ராமச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி பதவி வழங்கி ராமச்சந்திரன் அரசியல் பயணத்தின் முதல் மைல் கல்லை நட்டார். தொடர்ந்து அவர் சிறப்பாக கழகப் பணியில் ஈடுபட்டதால் மாவட்ட பிரதிநிதி பதவி அவரது வசமே இருந்தது. சிறிது காலங்களுக்கு பிறகு ராமச்சந்திரன் அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் பதவியை அலங்கரிக்கும் விதமாக வீரபாண்டியார் வாய்ப்பளித்தார். 


இந்தநிலையில் வீரபாண்டியார் மறைவுக்குப் பின்னர் பொறுப்பேற்ற வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான இரா.ராஜேந்திரன்‌, ராமச்சந்திரனுக்கு அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளராக பதவி உயர்வு கொடுத்து பணியாற்ற வாய்ப்பு அளித்தார். மேலும், கூடுதலாக அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கழகம் சொல்லும் அனைத்து பணியையும் சிறப்பாக காலதாமதமின்றி செய்து வருவதால் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு மிகவும் நம்பிக்கையானவர் ஆகவும் நெருக்கமானவராகவும் ராமச்சந்திரன் உள்ளார்.



ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை திராவிட கழகம் மக்கள் நலனுக்காக நடத்தும் அனைத்து போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ராமச்சந்திரன் அதற்காக பலமுறை கைதாகியுள்ளார். இதுமட்டுமின்றி தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்தப் பகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கு சென்று திராவிட முன்னேற்ற கழகத்திற்கான களப்பணியில் ஈடுபடுவார். அதேபோல் கழகம் கொடுக்கும் அனைத்துப் பணிகளையும் செம்மையாக செய்து முடிப்பவர் என்ற பெயரை அனைவராலும் சொல்லப்படக் கூடியவர் ராமச்சந்திரன்.


கிட்டத்தட்ட 60 ஆண்டுகால அரசியல் பயணத்தை திராவிட முன்னேற்ற கழகத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ராமச்சந்திரன். தனது 77 வது வயதில் சேலம் மாநகராட்சி 6-வது கோட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்றார். இத்தகைய சிறப்பு மிக்க மனிதரை சேலம் மாநகராட்சியில் ஐந்தாவது மேயர் வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.