சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுக சேர்க்க வேண்டும் என்று தேனி அதிமுகவினர் ஓபிஎஸ்-யிடம் நேற்று வலியுறுத்திய நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ்யசபா, எம்பி சந்திரசேகர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோரும் வருகை தந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் செங்கோட்டையன் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்