மேலும் வெளி மார்கெட்டில் கிலோ 100 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி நல்ல விலை விற்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்த வருகின்றனர். ஆனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் 120 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மேலும் தருமபுரியில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இடங்களில் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பராமரிப்பு, ஆள் கூலி போக, குறைந்த வருமானம் கிடைக்கிறது. ஆனால் உழைப்பு, முதலீடு எதுவும் இல்லாமல், வியாபாரிகளும், இடைத்தரகர்களும் அதிக லாபம் பெறுகின்றனர். இன்றைய நாளில் ஆப்பிள் விலையை முந்துகிறது தக்காளி, ஆனாலும் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தக்காளி விலை ஏற்றத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை - குமுறும் தக்காளி விவசாயிகள்
உமா மகேஸ்வரி, தருமபுரி
Updated at:
25 Nov 2021 12:26 PM (IST)
’’உழைப்பு, முதலீடு எதுவும் இல்லாமல், வியாபாரிகளும், இடைத்தரகர்களும் அதிக லாபம் பெறுகின்றனர். இன்றைய நாளில் ஆப்பிள் விலையை முந்துகிறது தக்காளி, ஆனாலும் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை’’
தக்காளி
NEXT
PREV
தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு வரத்து குறைவால், தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை-ஆப்பிளை முந்தும் தக்காளி ஆனாலும் இலாபம் எங்களுக்கு இல்லை தருமபுரி விவசாயிகள் வேதனை.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை சரிந்து கிலோ 10 ரூபாய்க்கும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி 250 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால், தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளி வெளியூர்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பொழிவு இருப்பதால், தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ 50 ரூபாய்க்கு விற்பன நிலையில், தற்போது மேலும் உயர்ந்து கிலோ 80 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
Published at:
25 Nov 2021 12:26 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -