தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளை ஏற்படுத்துகின்ற, விபத்துக்களில் சிக்கிய வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து  நீதிமன்றத்தில் பிணையில் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை எடுக்கின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் பிணையில் இருந்து எடுக்கப்பட்ட வாகனங்கள், மோட்டார் வாகன ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் தருமபுரி நகர காவல் நிலையத்தில் பல்வேறு விபத்துக்களில் சிக்கிய 15 வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளரின் தணிக்கைகாக தயார் நிலையில் இருந்தது. ஆனால் தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் வாகனங்களை தணிக்கை செய்ய காவல் நிலையத்திற்கு வந்தார்.

 



 

தொடர்ந்து அங்கிருந்த 15 வாகனங்களை போக்குவரத்து விதிகளின் படி தணிக்கை மேற்கொண்டார். இதில் வாகனங்களுக்கு முறையாக காப்பீடு இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லை, வாகனம் இல்லாதோர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனங்களை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக  வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 15 வாகனங்களுக்கும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 18 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் விபத்துக்களில் சிக்கிய வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு, வாகன உரிமையாளர்கள் எடுத்துச் சென்று தணிக்கைக்கு உட்படுத்த பட்டு சூழலில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் காவல் நிலையத்திற்கே வந்து ஆய்வு செய்தார். இதில் ஒரு சில வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையிலும், விபத்தில் சிக்கியவர்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலையும் இருக்கும் எனக்கருதி மோட்டார் வாகன ஆய்வாளர் நேரடியாக காவல் நிலையத்திற்கே வந்து ஆய்வு செய்துள்ளார்.

 



 

தொடர்ந்து ஆய்வின் போது வாகன ஓட்டிகளிடம் விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். எங்கு செல்வதாக இருந்தாலும் முன்னதாகவே கிளம்பி, மெதுவாக பாதுகாப்பாக செல்ல வேண்டும். இன்றைய காலத்தில் உள்ள இளைஞர் முதல் பெரியவர்கள் வரை, , வேகமாகச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்போம். ஆனால் மெதுவாக சென்று உயிரை காப்பாற்றிக் கொள்ளமாட்டோம் என்ற அடிப்படையில் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். அவ்வாறு வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டாம். மித வேகம், மிக நன்றி என்பதை உணர்ந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.