தருமபுரி நகரில் உள்ள கோட்டை கோயில் வரலட்சுமி உடனமர் பரவாசுதேவர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அதிகாலை 4:30 மணி அளவில் பரவாசுதேவசுவாமி பரமபதவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரமபத வாசல் திறந்தவுடன் பொதுமக்கள் கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டு சென்றனர். 

 



 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக  கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்ய செய்த பிறகு கோவிலினுள் அனுமதித்தனர். இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலில் நீண்ட வரிசையில்  ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். இதேப்போல் தருமபுரி எஸ்வி ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும், அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 



 

தருமபுரி நகர் பகுதிகளில், காப்பு கட்டுகளை செட்டாக விற்பனை செய்து வரும் கிராம புறத்தினர்

 

தை திருநாள் பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்கு முன் போகிப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இந்த போகிப் பண்டிகையில் பொங்களுக்கு தேவையான பொருட்களை சந்தைக்கு சென்று வாங்கி வந்து, பழையன கழிதலும், புதுவென் புகுதலும் என, பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.



 

இந்த போகி பண்டிகை கொண்டாடுவதாற்கு முன்பு, வீடுகளுக்கு புது வண்ணமிட்டு சுத்தப்படுத்தி காப்பு கட்டுவது வழக்கம். இதற்கு பூலா பூ, ஆவாராம்பூ, பண்ண பூ மற்றும் வேப்பிலை வைத்து, வீடுகளில் காப்பு கட்டுப்படும். இந்த காப்பு கட்டுவதற்கு தேவையான பூக்கள் காடுகளிலும், வயல் பகுதிகளிலும் இயற்கையாக வளரக் கூடியவை. இது கிராம புறங்களில் எளிமையாக கிடைக்கும். ஆனால் நகர் பகுதிகளில் கிடைப்பதில்லை. இதனால் கிராம புறத்தில் உள்ளவர்கள், கிராமங்களிலிருந்து காப்பு கட்ட தேவையான பூக்களை பறித்து, அதனை செட்டாக கட்டி நகர் புறங்களில் விற்பனை விற்பனை செய்து வருகின்றனர்.

 



 

இன்று காப்பு கட்டு என்பதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி போன்ற நகர் புறங்களில், கிராம புறத்திலிருந்து ஒரு சிலர் காப்பு கட்டு பூக்களை பறித்து வந்து, செட்டாக கட்டி வைத்து மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவமனை, கடைத்தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆண்கள் மிதிவண்டிகள் வத்துக் கொண்டு தெருக்களில் வீதி வீதியாக  சென்று காப்பு கட்டு ஒரு செட் ரூ10 முதல் 20 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனை நகர வாசிகள் அதிகாலை முதலே வாங்கி செல்கின்றனர். இந்த பூக்களை நேற்று நள்ளிரவே விற்பனை செய்ய,  ஒரு சிலர் கொண்டு வந்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.