அ.திமு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், அவ்வப்போது மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னிலையில், மதுரை உசிலம்பட்டி திமுக நகர மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன், திமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவி உள்ளிட்ட பலர் தங்களை அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடியாருக்கு பூங்கொத்து கொடுத்தும், வெற்றிலை மாலை அணிவித்தனர். அதனை பெற்றுக் கொண்ட எடப்பாடியாரை வரவேற்றார்.

- TN Govt: தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதலமைச்சர் தலைமையில் சீல் செய்யப்பட்ட டீல்..

இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ. மகேந்திரன்,பா. நீதிபதி, கே. தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், கே. மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமராஜா, ஒன்றிய கழகச் செயலாளர் செல்லம்பட்டி ராஜா, உசிலை டாக்டர் விஜய் பாண்டியன் உட்பட பலர் இருந்தனர். 

கடந்த மாதம் உசிலம்பட்டி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அ.ம.மு.க.விலிருந்து விலகி - அ.தி.மு.க.வில் இணைந்திருந்த நிலையில், தற்போது திமுக வின் முக்கிய நிர்வாகிகளும் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்வு உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - India Stock Market: உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தையான இந்தியா! - மொத்த மதிப்பு எத்தனை லட்சம் கோடிகள் தெரியுமா?

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?