தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், 5 மாநில தேர்தல் முடிந்தவுடன், டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக சட்டமன்றத்தில் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது இரண்டு மாநில மக்களிடையே உள்ள நல்லுறவை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு நேர்மையாக செயல்பட வேண்டும். ஆனால் பாஜக அரசை கர்நாடக அரசிற்கு சாதகமாக செயல்படுகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை வரவேற்கிறேன். அதேப்போல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வேண்டும். அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர். அரசின் நிதிச் சமைப்பதற்கு தெரியும். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேப்போல் குறைந்த ஊதியத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை, தொழிலாளர் நலவாரியம் மூலம், உள்ளே கொண்டு வர, முதல்வருக்கு தெரியாமல், தொழிலாளர் நலவாரிய அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு முதல்வர் சிக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தை உள்ள விடாமல் முதலமைச்சர் தடுக்க வேண்டும். என முத்தரசன் தெரிவித்தார். போரினால் முதலில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்தார்கள். இப்போது பொருளாதார நெருக்கடியால், அகதிகளாக வருகிறார்கள். இதனை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே, பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என மோடி தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
உக்ரைன் பிரச்சினையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்கள் படிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும். விருதுநகர் பாலியல் சம்பவத்தை கண்டித்து, வருகிற 27 தேதி எனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும். இந்தபாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது வரவேற்கதக்கது. ஆனால் ஆணவப் படுகொலை மற்றும் பாலியல் குற்ற சம்பவங்களுக்கு தண்டனை என்பது மூக்கனாங்கயிறு போல தான். ஆனால் இதற்கெல்லாம் தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.