தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி காப்பு காட்டில் காட்டெருமை, புள்ளிமான், மயில் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் இருந்து வருகிறது. இந்த வனப் பகுதிகளில் வன விலங்குகளின் தேவைக்காக ஆங்காங்கே குளங்கள் வெட்டி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வனப் பகுதியின் நடுவில் சாலை இருப்பதால், உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் சாலையை கடந்து செல்கின்ற நிலை இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் புள்ளி மான்களும், காட்டு பன்றிகளும் சாலையை கடந்து வனப் பகுதியில் செல்கின்றது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு புள்ளி மான்களும், காட்டு பன்றிகளும் உயிரிழக்கின்ற சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கொளகம்பட்டி காப்பு காடாடில் ஆண்டிப்பட்டி புதூர் அருகே நேற்று இரவு புள்ளிமான்கள் வனப் பகுதியில் உள்ள சாலையை கடந்துள்ளது. அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில், இரண்டு வயது மதிக்கத்தக்க இரண்டு புள்ளி மான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இன்று காலை சாலையில் வந்தவர்கள், மான்கள் உயிரிழந்ததைக் கண்டு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு வந்த மொரப்பூர் வனத் துறையினர் இரண்டு புள்ளி மான்களையும் மீட்டனர். இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்து வனப் பகுதியிலேயே அடக்கம் செய்தனர். மேலும் புள்ளி மான்கள் மீது மோதிய வாகனம் குறித்து மொரப்பூர் வனச் சரகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மொரப்பூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, மருதிப்பட்டி காப்புக் காடுகளில் வனப் பகுதிகளுக்கு நடுவே சாலை இருப்பதால் புள்ளி மான்கள் சாலையை கடக்கிறது. அப்பொழுது அதிகப்படியாக விபத்து ஏற்பட்டு வருகிறது. நேற்று வனப் பகுதியில் இருந்து பகலிலே புள்ளி மான்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக புள்ளி மான்கள் சாலையோரம் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்கள் மற்றும் மது பிரியர்களால், புள்ளி மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டு நாம் செய்தியை வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில் இன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு புள்ளி மான்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இந்த விபத்துகளை தடுப்பதற்காக வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.