சேலம்  மாவட்டம் மேட்டூர் அருகே, விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை கரைக்க, காவிரி ஆற்றுக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  தொட்டில் பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நந்தகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தொட்டில்பட்டியை சேர்ந்த நான்கு மாணவர்கள் தங்களது வீட்டில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக மேட்டூர் அணை வந்தனர். நான்கு நண்பர்கள் வந்த நிலையில் இரண்டு நண்பர்கள் விநாயகர் சிலையை மேட்டூர் அணையில் உள்ள 16 கண் மதகுகள் அருகே கரைக்க வந்த போது நீர் குறைவாக இருந்ததால் தண்ணீரில் சிக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்த இரண்டு பேர் சென்று அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். உடனடியாக இந்த பொதுமக்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தண்ணீரில் மூழ்கியவர்கள் உடலை மீட்பு பொதுமக்கள் முதலுதவி செய்தனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய இருவரும் உயிரிழந்ததாக தெரியவந்தது. பின்னர் சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.