தமிழகத்தில் பல கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகப்படுத்திய தமிழ்நாடு பிரீமியர் லீக் திருவிழா 6 வது சீசன் இம்மாதம் 23 ஆம் தேதி நெல்லையில் தொடங்கி நடைபெற உள்ளது. சேலம், கோவை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறுகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 9 போட்டிகள் சேலத்தில் நடப்பதாக டி.என்.பி.எல் நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களின் 8 அணிகள் இந்தப் போட்டியில் விளையாட உள்ளது. சேலத்தில் முதன் முறையாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. சேலம் மணியம் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் அஸ்வின் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 



இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி செய்தியாளர்களுக்கு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வருகிற 23 ஆம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி திருநெல்வேலியில் தொடங்குகிறது. வழக்கமாக சென்னை மற்றும் நெல்லை, நத்தத்தில் போட்டி நடக்கும். இறுதிப் போட்டி சென்னையில் நடக்கும். ஆனால் இந்த முறை திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்த போட்டி நடக்கிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்த முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி போட்டி நடக்கும். மொத்தம் எட்டு நாட்களில் 9 போட்டிகள் சேலத்தில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



சேலம் அருகே உள்ள காட்டுவேப்பிலை பட்டி பகுதியில் இருக்கும் சேலம் கிரிக்கெட் பவுன்டேசனில் இந்த போட்டி நடக்க உள்ளது. தினமும் சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போட்டியை பார்ப்பார்கள் என எண்ணுகிறோம். அவர்களுக்கான பேருந்து வசதி குறித்து போக்குவரத்து கழக அவனிடம் பேச உள்ளதாக கூறினார். நுழைவு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை Paytm வழியாக ஆன்லைனில் செலுத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.



அதன்பின் பேசிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் முருகன், இந்த ஆண்டு சேலம் ஸ்பாட்டன்ஸ் அணியில் விளையாடுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இருந்து பல இளம் கிரிக்கெட் வீரர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் பல கிராமப்புற இளைஞர்கள் இதனால் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்வேன் என்று கூறினார்.