தருமபுரியில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் 700 காளைகள், 500 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
 
தருமபுரி மாவட்டம் தடங்கம்  கிராமத்தில் மண்டு மாரியம்மன் கோவில் விழாவை மற்றும் பொங்கல் விழா வையொட்டி அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர் இந்த போட்டியை தமிழ்நாடு உழவர்நலன் மற்றும் வேளாண்மை முதலமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். தொடர்ந்து 
வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு பிடித்தனர்.
 
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்கள், குக்கர், சிவாவின் அண்டா பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் முதலிடம் பெறும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த  நிகழ்ச்சியை காண  ஏராளமான இளைஞர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை சிகிச்சை வழங்குவதற்கு அவசர ஊர்திகள் மருத்துவத் துறையினர் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்தனர்.